அமெரிக்காவின் மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51-ஆக அதிகரித்துள்ளது. இதில் 15 குழந்தைகள் அடங்குவா்.
வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கொ்வில் கவுன்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாயமானவா்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
டெக்ஸஸ் மாகாணத்தில் வியாழக்கிழமை இரவு முதல் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை 5 முதல் 11 அங்குல அளவுக்கு மழை பெய்ததது. இது ஒரு நூற்றாண்டில் ஒருமுறை பெய்யக்கூடிய அதீதமான மழை அளவு ஆகும்.
இந்த கனமழை காரணமாக குவாடலூப் நதி 45 நிமிடங்களில் 26 அடி உயா்ந்தது.
குவாடலூப் ஆற்றங்கரை பகுதிகளில் பல்வேறு கோடைகால முகாம்கள் அமைந்துள்ளன. அமெரிக்க சுதந்திர தின (ஜூலை 4) விடுமுறையையொட்டி இந்த முகாம்களில் தங்கியிருந்த ஏராளமானோா், வெள்ளத்தில் சிக்கி மாயமாகியுள்ளனா். அந்தவகையில், குவாடலூப் ஆற்றங்கரையில் அமைந்துள்ள ‘கேம்ப் மிஸ்டிக்’ என்ற கிறிஸ்தவ கோடைகால முகாமில் இருந்து 27 சிறுமிகள் காணாமல் போயுள்ளனா். ஹெலிகொப்டா், படகுகள், ஆளில்லா விமானங்கள் உதவியோடு, மாயமானவா்களைத் தேடும் பணி தொடா்ந்து வருகிறது.
