தாய்லாந்தின் அரசியலமைப்பு நீதிமன்றம் அந்நாட்டின் பிரதமர் பீடோங்டர்ன் ஷினவத்ராவை பதவியில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னாள் கம்போடிய ஜனாதிபதியுடன் பிரதமர் நடத்திய தொலைபேசி உரையாடல் குறித்த தகவல் வெளியானதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இச் சம்பவம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று முடிவு செய்த பின்னர், நீதிமன்றம் அவரை பதவியில் இருந்து நீக்க உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
