விக்டோரியா நகரம் பொதுப் பாதுகாப்பிற்காக 10.35 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியை ஒதுக்கியுள்ளது.
அண்மையில் ஏற்பட்ட தொடர் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் பொது ஒழுங்கீனம் குறித்த பிரச்சினைகளைத் தொடர்ந்து, இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியினூடாக, காவல்துறை மற்றும் நகரச் சட்ட அமலாக்க நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
விக்டோரியா நகரின் மத்தியப் பகுதியில் நிலவும் சவால்களை எதிர்கொள்வதற்கு, பல கட்டங்களாக, இந்த நிதி மறு ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
திட்டத்தின் மொத்த நிதியில் 1.9 மில்லியன் டொலர்கள், புதிய நகரச் சட்ட அமலாக்க அதிகாரிகளை நியமிப்பதற்காகச் செலவிடப்படும்.
நகரச் சட்ட அமலாக்க அதிகாரிகள் பன்டோரா, பிரின்சஸ் மற்றும் நகர மையப் பகுதிகளில் காவல்துறையினருக்கு துணையாகச் செயல்படுவார்கள்.
விக்டோரியா காவல்துறையானது (VicPD) ஒன்பது புதிய காவல்துறை அதிகாரிகளை நியமிப்பதற்காக 1.35 மில்லியன் டொலர்களைப் பெறவுள்ளது.