Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

டிஜிட்டல் சேவை வரியை (DST) இரத்து செய்வதாக அறிவித்த கனடா

ஜூன் 30, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கனடா தனது டிஜிட்டல் சேவை வரியை (DST) இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் கோரிக்கைகளுக்கு இணங்கவும், அமெரிக்காவுடனான முக்கிய வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கும் கனடாவின் இந்த கொள்கைமுடிவு உதவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு சட்டமாக்கப்பட்டு, அமுல்படுத்தப்படவிருந்த டிஜிட்டல் சேவை வரி, திங்கட்கிழமை முதல் வசூலிக்கப்படவிருந்தது.

இந்த டிஜிட்டல் சேவை வரி, அமேசான், கூகுள், மெட்டா, ஊபர் மற்றும் ஏர்பிஎன்பி போன்ற பெரிய அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் கனேடிய பயனாளிகளிடமிருந்து பெறும் வருமானத்தில் மூன்று சதவீதத்தை, கனேடிய அரசுக்கு செலுத்த வேண்டும் என, வற்புறுத்தியது.

தற்போது, இந்த வரி வசூல் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் சேவை வரிச் சட்டத்தை இரத்து செய்வதற்கான சட்டமூலத்தை, கனடாவின் நிதி அமைச்சர் பிராங்கோயிஸ்-பிலிப் ஷாம்பெயின் விரைவில் கொண்டு வருவார் என்றும் கனடாவின் நிதியமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவுடன் புதிய பொருளாதார மற்றும் பாதுகாப்பு கூட்டுமுயற்சி குறித்த சிக்கலான பேச்சுவார்த்தைகளில் கனடா ஈடுபட்டுள்ளதாகவும், அந்தப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காண்பதற்காகவும், “அனைத்து கனேடியர்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, செழிப்பை கட்டியெழுப்பும் எங்கள் பணிகளை வலுப்படுத்துவதற்காகவும்” இந்த வரி இரத்து செய்யப்படுவது உதவும் என்றும் அமைச்சர் ஷாம்பெயின் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்தார்.

“பரஸ்பர நன்மை பயக்கும் விரிவான வர்த்தக ஏற்பாட்டிற்கான எதிர்பார்ப்பில்” இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கனேடிய மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் கார்னியும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.

இருநாடுகளுக்கும் இடையிலான ஒரு வர்த்தக உடன்பாட்டை, ஜூலை மாதம் 21 ஆம் திகதிக்குள், எட்டுவதே இதன் இலக்காகும்.

கடந்த வெள்ளிக்கிழமை, இந்த டிஜிட்டல் சேவை வரியின் காரணமாக கனடாவுடனான அனைத்து வர்த்தகப் பேச்சுவார்த்தைகளையும் தாம் நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

முந்தைய செய்தி கதிர்காமத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த பேரூந்து மரத்துடன் மோதி விபத்து!
அடுத்த செய்தி ஒன்ராறியோவில் விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஒன்ராறியோவின் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் சமர்ப்பித்தார் நிதி அமைச்சர்

மார்ச் 27, 2026
கனடாமுதன்மை செய்தி

கனடிய சிவில் நிர்வாகத்தில் பிரதமர் மார்க் கார்னி மேற்கொண்ட பாரிய அதிரடி மாற்றம் -12 உயர் அதிகாரிகளுக்குப் புதிய பொறுப்புகள் ஒதுக்கீடு!

மார்ச் 4, 2026
கனடாமுதன்மை செய்தி

லீஃப் ராப்பிட்ஸ் நகர மக்கள் அவசர வெளியேற்றத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கை விடுப்பு .

ஜூலை 7, 2025
அண்மைய செய்திகள்கனடா

கனடா வீணைமைந்தனுக்கு இயற் தமிழ் வித்தகர்’ பட்டம் வழங்கிக் கௌரவிப்பு.

ஏப்ரல் 17, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?