கதிர்காமத்தில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த தனியார் போக்குவரத்து பேரூந்து வேககட்டுப்பாட்டை மீறி மட்டக்களப்பு கிரான்குளத்தில் மரம் ஒன்றுடன் மோதி விபத்தில் 3 பேர் படுகாயடைந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
கதிர்காமத்தில் இருந்து மட்டக்களப்புக்கு விசேட போக்குவரத்து சேவையில் ஈடுப்பட்ட தனியார் பேரூந்து சம்பவதினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை கதிர்காமத்தில் இருந்து மட்டக்களப்பை நோக்கி பாதையாத்திரை சென்றவர்களை ஏற்றிக் கொண்டு பயணித்தது.
இவ்வாறு பயணித்த பேருந்து கல்முனை மட்டக்களப்பு வீதியிலுள்ள கிரான்குளம் தபாற்கந்தோருக்கு அருகாமையில் அதிகாலை 4.30 மணியளவில் வேகக்கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.