ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கு விஜயமொன்றை மேற்க்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இவ்விஜயமானது ஜூலை மாதத்தின் இறுதி வாரத்தில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக அமையும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மாலைத்தீவு விஜயமானது இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் நோக்கிலும் மாலைதீவின் சுதந்திர தின கொண்டாட்டத்திற்காகவும் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.