Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

மன்னாரில் வெகு விரைவில் மாவட்டம் தழுவிய ரீதியில் போராட்டம்-அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார்!

செப்டம்பர் 24, 2025
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

மன்னாரில் காற்றாலை திட்டங்களை தொடர்வது ஜனாதிபதியின் தன்னிச்சையான முடிவாக இருந்தாலும் எமது மண்ணையும் வளங்களையும், உரிமையையும் ,பாதுகாக்க போராட்டங்களை தொடர்வது எமது உரிமை என்றும்,சில தினங்களில் மாவட்டம் தழுவிய ரீதியில் பாரிய போராட்டம் வெடிக்கும் என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை எஸ்.மாக்கஸ் அடிகளார் எச்சரித்துள்ளார்.

மன்னார் போராட்டக்களத்தில் இன்று புதன்கிழமை (24) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டம் இன்று புதன்கிழமை (24) 53 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

நேற்று செவ்வாய்க்கிழமை (23) ஜனாதிபதி செயலகத்தில் இருந்து மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பது தொடர்பான தனது செய்தியை அனுப்பி உள்ளார்.மன்னாரில் குறித்த 14 காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகள் நிறுத்த தேவையில்லை.அதற்கான பணிகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறும்,அதனால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் மற்றும் முன்னர் ஏற்பட்ட பாதிப்புக்களையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற கட்டளையையும் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு வழங்கியுள்ளார்.

எதை வைத்து குறித்த அனுமதியை ஜனாதிபதி வழங்கியுள்ளார் என்று எமக்கு தெரியவில்லை.பல முறை குறித்த திட்டம் குறித்து அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடனும்,ஜனாதிபதியுடனும் தொடர்பு கொண்டு மக்களுடைய கருத்துக்களையும்,எங்களுடைய கருத்துக்களையும் முன் வைத்தோம்.

எனினும் மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்காமல்,தான்தோன்றித்தனமாக தனது சுய முடிவை எடுத்துள்ளமை மன வேதனையை நம்பியிருந்த எமக்கு ஏற்படுத்தியுள்ளது.

வாழ்வது எமது உரிமை.அதை யாரும் பறிக்க முடியாது.அந்த உரிமைக்காக நாங்கள் தொடர்ந்தும் போராடுவோம்.எமது போராட்டம் விரிவடைகிறது என்பதை உங்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகின்றோம்.எமது மூன்று கோரிக்கைகள் நிறைவேறும் வரை எமது போராட்டம் தொடரும்.மாவட்ட ரீதியில் மக்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பாரிய போராட்டமாக மாறவுள்ளது.

நாங்கள் சட்டத்தை மீறுகின்ற போராட்டமாக ஏனையவர்களுக்கு இடையூரை ஏற்படுத்துகின்ற போராட்டமாக இப்போராட்டம் ஒருபோதும் அமையாது.

இவற்றுக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கைகளையும் நாங்கள் முன்னெடுத்து வருகின்ற போதும்,எமது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்படும்.கவலைக்குரிய விடயம் என்ன என்றால் எமது மன்னார் மாவட்டச் செயலகம் அரச அதிபர் மற்றும் அவருடன் கடமையாற்றுகின்ற அதிகாரிகளுடைய செயல்பாடுகள் எமக்கு மிகவும் கவலையை ஏற்படுத்துகின்றது.

குறித்த கடிதம் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (23) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.எனினும் நேற்று மாலை ஒருவரை அனுப்பி இக்கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ளோம்.மிகவும் வேதனையான விடையமாக அமைந்துள்ளது.

கடந்த 40 நாட்களாக இடம் பெற்ற வேலைத்திட்டங்களை மாவட்டச் செயலகம் கண்காணிக்கவில்லை என்பதை இவ்விடத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

மாவட்டச் செயலகமும்,அதிகாரிகளும் இத்திட்டங்களுடன் ஒத்துப்போகின்றார்களா?என்கின்ற சந்தேகம் எழுந்துள்ளது.மக்களை அழிக்கும்,மக்களின் வாழ்விடங்கள் பறிக்கின்ற,இத்தீவை இல்லாது செய்கின்ற செயல்பாடுகளுடன் அதிகாரிகள் அனைவரும் இணைந்து போகின்றார்களா?,என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.

அவர்களின் செயல்பாடு மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.மக்களாகிய நாங்கள் ஒன்றிணைந்து எமது மண்ணையும்,வளங்களையும்,உரிமையையும் பாதுகாக்க எமது போராட்டம் தொடரும்.இனி வரும் நாட்களில் இப்போராட்டம் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படும்.

எதிர்வரும் திங்கட்கிழமை (29) மன்னாரில் மாவட்ட தழுவிய ரீதியில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு எமது சக்தியை இந்த அரசுக்கு காண்பிக்க வேண்டும்.ஜனாதிபதி தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளார் என்பதே மிகவும் கவலைக்குரிய விடயம்.

மக்களை பாதிக்காத வகையில் நடவடிக்கை களை எடுப்போம் என அனைத்து அதிகாரிகளும் தெரிவித் திருந்தனர்.ஆனால் ஜனாதிபதியினுடைய அறிவித்தல் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. அது ஜனாதிபதியின் முடிவாக இருக்கின்ற நிலையில்,எங்களுடைய முடிவு எங்களுடைய உரிமைகளை பெற்றுக் கொள்ளுவோம் என்ற ஒரு முடிவு தான்.

எனவே இந்த போராட்டக் களத்தில் இருந்து சட்டங்களை மீறாது எமது போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்.
சட்ட ரீதியாக மூன்று நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.கனிய மணல் அகழ்விற்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கையை முன்னெடுத்து வருகிறோம்.14 காற்றாலை திட்டங்களுக்கு எதிரான இரு வழக்குகளை தாக்கல் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. என அவர் மேலும் தெரிவித்தார்.

முந்தைய செய்தி கொழும்பு தாமரை கோபுரத்தில் வெளியாகவுள்ள புதிய திட்டம்!
அடுத்த செய்தி கட்டுநாயக்கவில் கைதான இளைஞனிடம் தீவிர விசாரணை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

West Island 2026 மெய்வல்லுநர் போட்டிகள்

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

முறையற்ற சொத்து சேகரிப்பு – மஹிந்த குடும்பத்தினருக்கு எதிராக சிஜடியில் முறைப்பாடு!

செப்டம்பர் 23, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். பல்கலையில் பொன்விழா

அக்டோபர் 6, 2025
இலங்கை

விவசாயப் போதனாசிரியர்களின் வெளிக்களக் கொடுப்பனவுகள் தொடர்பான மீளாய்வு.

பிப்ரவரி 3, 2025
இலங்கை

யாழில் சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு.

பிப்ரவரி 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?