Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் அணையா விளக்கு போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பு

ஜூன் 22, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

யாழ்ப்பாணம் – செம்மணி பகுதியில் நடைபெறவுள்ள “அணையா விளக்கு” போராட்டத்திற்கு தமிழர் தேசமாக அனைவரும் அணி திரள வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்குச் சர்வதேச நீதி கோரியும், சர்வதேசக் கண்காணிப்புடன் மனிதப் புதைகுழி அகழ்வை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் ‘மக்கள் செயல்’ என்கின்ற தன்னார்வ இளையோர் அமைப்பால், நாளைய தினம் திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரையிலான மூன்று நாட்கள் செம்மணி வளைவுப் பகுதியில் ‘அணையா விளக்கு’ போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

சிவில் சமூக அமைப்புகள் இணைந்து அணையா விளக்கு என்ற போராட்டத்தை மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி வேண்டி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது.

நாங்கள் ஒரு பங்காளராக பங்கேற்று முற்றுமுழுதாக வடக்கு கிழக்கில் மிகப்பெரிய அழைப்பை முன்னெடுக்கின்றோம். எமது உறவுகளுக்காக உயிரிழந்த உறவுகளுக்காகவும் இழைக்கப்பட்ட அநீதிக்காகவும் தமிழ் தேசமாக திரண்டு போராட்டத்தில் ஒன்றுசேர வேண்டும்.

இலங்கைக்கு தற்போது வருகைதரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணத்திற்கும் விஜயம் செய்ய உள்ளதாக அறிய முடிகிறது. மிக முக்கியமாக செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தை மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதியை மனிதப் புதைகுழியாக அறிவிக்க வேண்டும். தொடர்ச்சியாக சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டு சர்வதேசத்தின் முற்று முழுதாக தலையிட்டு அகழ்வாய்வை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் ஈழத் தமிழர்களுடைய பிரச்சினையை திசை திருப்பவே மனித உரிமைகள் ஆணையாளரை இலங்கை அரசாங்கம் அழைத்துள்ளது. வடக்கு கிழக்கு தமிழர்கள் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி எங்கள் பிரச்சினைகளையும் மனித புதைகுழிகள் தொடர்ச்சியாக தோண்டப்படும் விடயங்களையும் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

முந்தைய செய்தி தலைமன்னார் ஊடாக தமிழகம் தப்பி செல்ல முற்பட்ட நபர்கள் கைது!
அடுத்த செய்தி யாழில் லிப்ட் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

ஒட்டாவா தமிழர் கொண்டாட்டம் | Ottawa Tamil Fest 2026

Riverside Rhythms

அமர்க்களம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

கனடா அனுப்புவதாக பணம் வாங்கி ஏமாற்றிய முகவர் – யாழில். குடும்பஸ்தர் உயிர்மாய்ப்பு!

ஜூலை 16, 2025
அண்மைய செய்திகள்உலகம்

உயிரைப் பணயம் வைத்து மக்களைக் காப்பாற்றிய கதாநாயகனை சந்தித்தார் பிரதமர்

டிசம்பர் 16, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

நவம்பர் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மாநகர சபை கொட்டும் கழிவுகளால் காக்கைதீவு மக்களுக்கு பெரிதும் பாதிப்பு

ஜூலை 13, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?