ஸ்கார்பரோவில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்
இன்று காலை காலை 10 மணிக்கு முன்பாக பிரைட்லி ட்ரைவ் Bridley Drive மற்றும் பிரிம்வுட் பொலிவொர்ட் Brimwood Boulevard அருகே, மெக்வொன் வீதி McCowan Road மற்றும் பின்ச் அவன்யூ Finch Avenue பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த பாதசாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயெ இருந்து விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தினை ஏற்படுத்திய வாகனம் பாதையை விட்டு விலகி பாதசாரி மீதும் மரம் ஒன்றுடனும் மோதியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தின் போது வீதிகள் வலுக்கும் தன்மையுடன் காணப்படுவதால் சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்தவேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது