கன்செர்வேட்டிவ் கட்சி தலைவர் பியர் பொலிவேர்,மற்றும் சிங் ஆகியோர் மார்க் கார்னியின் முதலீட்டு நிறுவனப் பணிகளை இலக்காகக் கொண்டதால் பிரச்சாரப் பாதையில் வரிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன.
கனடாவின் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் மதம் 28ம் திகதி இடம்பெறவுள்ளநிலையில் பிரச்சார பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
மேலும் பிரச்சாரப் பாதையில் வரிகள் ஆதிக்கம் செலுத்துவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. கன்செர்வேட்டிவ் கட்சி தலைவர் பியர் பொலிவேர் , மார்க் கார்னியின் முதலீட்டு நிறுவனப் பணிகளை குறிவைத்து பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்.
புரூக்ஃபீல்ட் என்ற முதலீட்டு நிறுவனத்தில் மார்க் கார்னி பணியாற்றியதற்காக லிபரல் தலைவர் மார்க் கார்னியை போட்டியாளர்கள் விமர்சித்து வருகின்றார்கள்.
இதற்கு பதிலளித்த மார்க் கார்னி, முதலீட்டு அமைப்பு கனடா வழியாக வரிகளை செலுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது – இது இங்கு ஓய்வூதிய நிதிகளுக்கு உதவுகிறது என்று கூறினார்.அவர் பெய்ஜிங்கிற்குக் கீழ்ப்படிந்துள்ளார் என கன்செர்வேர்டிவ் கட்சி முன்வைத்த குற்றச்சாட்டையும் மார்க் கார்னி மறுத்துள்ளார்.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று மதியம் வாகன கட்டணங்கள் பற்றி பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.