நாட்டில் தற்போது கடும் வெப்பமான காலநிலை நிலவுகின்றது. இந்த வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
இந்த அதி உயர் வெப்பம் காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணிவரை நீடிக்குமென திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.
இவ்வாறான காலப்பகுதியில் பொதுமக்கள் வெளியில் நடனமாடுவதை குறைத்து கொள்வது நல்லது என்றும் வெளியில் செல்ல வேண்டிய தேவையிருப்பின் பாதுகாப்போடு செல்ல வேண்டும் என கூறியுள்ளார்.
குறித்த வெப்பத்தால் பலதரப்பட்ட நோய்கள் ஏற்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
