நேட்டோ உறுப்பு நாடுகள் பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க ஒப்புதல் அளித்தமை கனடாவுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பின் பேரில், அண்மையில் ப்ரூசெல்ஸில் ஒன்றுகூடிய நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், உறுப்பு நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 5 சதவீதத்தினை பாதுகாப்புச் செலவுகளுக்கு ஒதுக்க வேண்டும் என்ற புதிய இலக்கிற்கு ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்த மாத இறுதியில் நெதர்லாந்தின் ஹேக் நகரில் நடைபெறும் நேட்டோ தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
அம்மாநாட்டில் இந்த விடயம் குறித்து கலந்தாலோசிக்கப்படவுள்ளது.
இந்த புதிய இலக்கின்படி, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5% அடிப்படை இராணுவ திறன்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
மீதமுள்ள 1.5% பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான முதலீடுகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
நேட்டோ கூட்டணியை “வலிமையான, ” ஒன்றாக மாற்றுவதே இதன் நோக்கம் என்று நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
நேட்டோவின் 2024 ஆம் ஆண்டு அறிக்கைப்படி, கனடா இந்த இலக்குகளை அடைவதற்கு இன்னமும் வெகுதூரம் உள்ளது.
2023 ஆம் ஆண்டில், கனடாவின் பாதுகாப்புச் செலவு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.3% ஆக மட்டுமே இருந்தது.
இது 2024 ஆம் ஆண்டில், 1.45% ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களால் நிர்ணயிக்கப்பட்ட புதிய இலக்குடன் ஒப்பிடுகையில், இது மிகவும் குறைவானது.
இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்வின்டி, கனடா தனது அனைத்து செலவுகளையும் மறுபரிசீலனை செய்து வருவதாகக் கூறியுள்ளார்.
