மன்னர் சார்ள்ஸின் அண்மைய ஒட்டாவா விஜயமானது அவருக்கும் கனடாவுக்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாகப் பார்க்கப்படுகிறது எனத் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சுற்றுப்பயணத்தின் போது, 24 மணி நேரத்திற்கும் குறைவான காலப்பகுதியை அரச தம்பதியினர் கனடாவில் செலவிட்டனர்.
இது “மிகவும் வெற்றிகரமான அரச விஜயங்களில் ஒன்று” என்று, மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் ஜஸ்டின் வோவ்க் தெரிவித்துள்ளார்.
லண்டன் ரோயல் ஹோலோவே பல்கலைக்கழகத்தின் அரசியலமைப்பு நிபுணரும் சட்ட விரிவுரையாளருமான கிரேக் பிரெஸ்காட் இது குறித்து கருத்து தெரிவிக்கும் போது, மன்னர் சார்ள்ஸ், தனது தாய் இரண்டாம் எலிசபெத் ராணியின் 70 ஆண்டு கால ஆட்சியில் இருந்து தன்னை “நவீன மன்னராக” வேறுபடுத்திக் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.
