மொன்ட்ரியல் நகரின் முன்னாள் செயற்குழுத் தலைவரான ஃபிராங்க் சாம்ப்பினோ (Frank Zampino), தன்மீதான நகராட்சி ஊழல் வழக்கில் செவ்வாய்க்கிழமை கடுமையான குறுக்கு விசாரணையை எதிர்கொண்டார்.
தனக்கு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் ஒருபோதும் பார்த்திராததாகவும் அவர் கூறும் தொலைநகல் ஆவணங்கள் மற்றும் அவரது வீட்டில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. மேலும், ஆவணச் சேமிப்புக்கான “ஹார்ட் டிரைவ்” ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
இந்த நிலையில், குறித்த ஹார்ட் டிரைவ் தன்னுடையது அல்ல என்று ஃபிராங்க் சாம்ப்பினோ குறிப்பிட்டுள்ளார். 65 வயதான சாம்ப்பினோ, ஹார்ட் டிரைவில் விசாரணையாளர்கள் கண்டுபிடித்த பெரும்பாலான உள்ளடக்கங்கள் குறித்து தனக்கு பொதுவாகத் தெரியும் என்பதை
ஒப்புக்கொண்டார்.
