மேற்குக்கரையில் இஸ்ரேலிய இராணுவமானது, கனேடியர்கள் உட்பட இராஜதந்திரக் குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமை “முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என, கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்தவும், உடனடியாக விளக்கமளிக்கவும் கனடா வலியுறுத்தியுள்ளது.
புதன்கிழமை ஜெனின் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த கனேடிய தூதுக்குழுவில் நான்கு பேர் இருந்ததாகவும், அவர்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் (IDF) துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கனேடிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த குழுவில் இரண்டு கனேடியர்களும், இரண்டு உள்ளூர் ஊழியர்களும் இருந்ததாக வெளிவிவகார அமைச்சர் அனிதா ஆனந்தின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஒரு முழுமையான விசாரணையையும் என்ன நடந்தது என்பது குறித்து உடனடியாக விளக்கத்தையும் தாம் எதிர்பார்ப்பதாக, பிரதமர் கார்னி ஒட்டாவாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
