கனடாவை 51வது மாநிலமாக்குவேன் என்ற அச்சுறுத்தலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
கனடா பிரதமர் மார்க் கார்னி முக்கியமான வெள்ளை மாளிகை சந்திப்புக்கு தயாராகி வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் செயற்பாடு இவ்வாறு அமைந்துள்ளது.
கனடாவை இராணுவ பலத்தைப் பயன்படுத்தி அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இராணுவ பலத்தைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்படாது என்று தாம் கருதுவதாகப் பதிலளித்துள்ளார்.
அதே வேளை, கனடாவின் இறையாண்மை பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல என்று கார்னி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
