கனடாவுக்கு நீர்மூழ்கிக் கப்பல்கள், கவச வாகனங்களுக்கான $20 பில்லியன் டொலர் திட்டத்தை தென் கொரியா முன்வைக்கின்றது.
அமெரிக்காவுடனான கனடாவின் உறவுகள் முரண் நிலையை எட்டியுள்ள வேளையில், கனடாவுடன் பாதுகாப்பு உறவை வலுப்படுத்த தென் கொரியா தீவிரமாக முயன்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கனடாவின் பழைய நீர்மூழ்கிக் கப்பல்களை விரைவாக மாற்றுவதற்கும், புதிய பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்கள் மூலம் கனேடிய இராணுவத்தின் பலத்தை அதிகரிப்பதற்கும் $20 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள ஒரு பெரிய திட்டத்தை தென் கொரிய நிறுவனங்கள் முன்வைத்துள்ளன.
மூன்று தென் கொரிய பாதுகாப்பு நிறுவனங்கள் இந்த விரிவான திட்டங்களை மார்ச் மாத தொடக்கத்தில் கனடா அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, கனடாவுடனான பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பிற்கான பங்கேற்பினை வலுப்படுத்துவதற்கு தென்கொரியா ஆர்வத்தை வெளிப்படுத்தி வந்தது.
இந்த திட்டத்தின் மூலம் முதல் நான்கு புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை 2035 ஆம் ஆண்டிற்குள் கனேடிய கடற்படை பெற்றுக் கொள்ல முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
