கியூபெக் நகரில் 53 வயதுப் பெண் ஒருவர் உயிரிழப்புக்குக் காரணமான சாலை விபத்து குறித்த விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
இந்த விபத்து கடந்த சனிக்கிழமை மாலையில் கியூபெக் நகரத்தின் வில்ஃப்ரிட்-ஹேமல் பவுல்வர்ட் (Wilfrid-Hamel Boulevard) பகுதியில் இடம்பெற்றது.
விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அப்பெண்ணை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.
எனினும், மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி அவர் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தார்.
காரை ஓட்டிய 30 வயதுடைய ஆண் மற்றும் அவருடன் பயணித்த ஒரு பயணி ஆகியோர் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பினர் என்று காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
விபத்திற்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை ஆராய்வதற்காக, சம்பவ இடத்தில் உடனடியாகப் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு, தடயவியல் மற்றும் விபத்து ஆய்வுக் குழுவினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
