Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

கல்கிஸ்ஸை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – விசாரணையில் வெளியான தகவல்கள்

மே 5, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கல்கிஸ்ஸை பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இன்று காலை 6.40 அளவில், கல்கிஸ்ஸை புனித சில்வஸ்டர் வீதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபையில் பணிபுரியும் பிரவீன் நிசங்க என்ற இளைஞரே இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார்

குறித்த இளைஞர் சாலையைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது உந்துருளியில் பயணித்த இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய இரண்டு குழுக்களுக்கு இடையேயான மோதலே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சிசிரிவி காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது .

குறித்த இளைஞன் கல்கிஸ்ஸை புனித சில்வஸ்டர் வீதியில், துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த போது உந்துருளியில் வந்த இருவர் அவரை கடந்து செல்வது சிசிரிவி காணொளியில் பதிவாகியுள்ளது.

பின்னர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞன் காலி வீதியை நோக்கி ஓடுவதையும், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்ட நபர் உந்துருளியில் இருந்து இறங்கி அவரை துரத்திச் சென்று ,கல்கிஸ்ஸை கடற்கரை வீதியில் உள்ள விற்பனை நிலையமொன்றிற்கு அருகில் வைத்து மீண்டும் அவர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமை சிசிரிவி காணொளியில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்த இளைஞன் தெஹிவளை ஓபன் பிளேஸ் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், சதுரி என அழைக்கப்படும் நிம்மி சுமேதா பொன்சேகா என்ற போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடும் பெண்ணின் மகன் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் போதைப்பொருள் கடத்தல்காரரான படோவிட்ட அசங்கவுடன் இணைந்து போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்டவர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு அப்பெண் மற்றுமொரு, போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய கோஸ்மல்லி என்பவருடைய உறவினர் ஆவார்.

பட்டோவிட்ட அசங்கவிற்கும் கோஸ்மல்லிக்கும் இடையில் சிறிது காலமாகத் தகராறு இருந்து வந்துள்ளது.

குறித்த இரு தரப்பினருக்கும் இடையில் தொடர்ந்தும் நிலவிவரும் மோதலே இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு காரணம் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

முந்தைய செய்தி கனடாவை 51வது மாநிலமாக்குவேன் என அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தல்
அடுத்த செய்தி பாகிஸ்தானில் நிலஅதிர்வு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

பெற்ற குழந்தைகளை கொன்ற வழக்கில் டிக் டொக்(TikTok) பிரபலம் அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை!

ஜூலை 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கடற்படை வீரர்களை கௌரவியுங்கள் – பல்கலை மாணவர்கள் கோரிக்கை

டிசம்பர் 8, 2025
1
அண்மைய செய்திகள்இலங்கை

மாட்டினை மீட்க கொட்டும் மழையில் போராடிய பெண்…

ஏப்ரல் 9, 2025
இலங்கை

100 புகையிரத நிலையங்களை நவீனமயப்படுத்தும் திட்டத்தின் முதற் கட்டம் இன்று ஆரம்பமானது!

செப்டம்பர் 2, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?