கனடாவின் பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றி மூலம் ஏற்கனவே அடைந்திருந்த ஆட்சி அதிகாரத்தை, லிபரல் கட்சி தக்கவைத்துக் கொள்கின்றது.
லிபரல் கட்சித் தலைவர் மார்க் கார்னி மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்று புதிய ஆட்சியை அமைக்கவுள்ளார்.
Ontario வின், Nepean தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட லிபரல் கட்சியின் தலைவர் Mark Carney, 63.7 சதவீத வாக்குகளைப் பெற்று, மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளார்.
மார்க் கார்னியின் அரசாங்கத்தில் நீதியமைச்சராகப் பணியாற்றிய Gary Anandasangaree, 31,678 வாக்குகள் பெற்று, தற்போதைய தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
Scarborough-Guildwood-Rouge Park தொகுதியில் தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளர் Suchita Jalan ஐயும் NDP கட்சி வேட்பாளர் Kinoslav Kwok கையும் அவர் தோற்கடித்துள்ளார்.
மேலும், Ontarioவின் Pickering-Brooklin பகுதியில், லிபரல் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்ட Juanita Nathan, 24,951 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
Quebec மாகாணத்தின் Marc-Aurèle-Fortin Riding தேர்தல் தொகுதியில் லிபரல் கட்சி வேட்பாளரான Carlos Leitão, 29,024 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இவரை எதிர்த்துப் போட்டியிட்ட Bloc Québécois கட்சியைச் சேர்ந்த Claude Tousignant 13,139 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியைத் தழுவியுள்ளார்.
Quebec மாகாணத்தின் Vimy Riding தேர்தல் தொகுதியில் லிபரல் கட்சி வேட்பாளரான Annie Koutrakis, 53.5 சதவீத வாக்குகளைப் பெற்று வென்றுள்ளார்.
Quebec மாகாணத்தின் Laval-Les Îles தேர்தல் தொகுதியில், லிபரல் கட்சியைச் சேர்ந்த Fayçal El-Khoury, 24,909 வாக்குகளைப் பெற்று, தமது பிரதான போட்டியாளரான கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த Konstantinos Merakos ஐ, தோற்கடித்துள்ளார்.
இதேவேளை, Quebec மாகாணத்தின் Papineau Riding தேர்தல் தொகுதியில், லிபரல் கட்சி வேட்பாளரான Marjorie Michel, 52.5 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இந்த தொகுதியில் போட்டியிட்ட Bloc Québécois கட்சி வேட்பாளரான Sophy Forget 17.1 சதவீத வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்துள்ளமை சுட்டிக் காட்டத்தக்கது.
