சுற்றுலாத் தலமான காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் 28 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததாக தெரியவருகின்றது. இதன்போது 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஜம்மு – காஷ்மீரின் அனந்த் நாக் மாவட்டத்தின் பஹல்காம் பிரதேசத்தில் உள்ள பைசாராம் பகுதியில் இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் ரசித்து கொண்டு
இருந்தபோதே, பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாயினர். இத்தாக்குதலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் அனைவரும் இந்திய இராணுவத்தின் சீருடையை அணிந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதேவேளை, பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகியோர் கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.