தமிழகத்தில் உள்ள அனைத்து பாரதீய ஜனதா கட்சி, அலுவலகங்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரன் இதனை வலியுறுத்தி உள்ளார்.
வக்ப் திருத்தச் சட்டத்தை எதிர்ப்பதாகக் கூறி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு அமைப்பான ஆதித்தமிழர் கட்சியினர், பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை
எரித்து வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டு, தமிழக பாரதீய ஜனதா கட்சி, அலுவலகத்தை முற்றுகையிட முயற்சித்திருந்தது.
இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய செய்ய வேண்டும் என்று தமிழக பாரதீய ஜனதா தலைவர்
நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார்.