கனடாவின் நான்கு பிரதான கட்சிகளின் தலைவர்கள் நேற்று இரவு தங்களது கடைசி விவாதத்தில் ஒருவரையொருவர் எதிர்கொண்டனர்.
கனடாவின் பிரதமரும் லிபரல் கட்சியின் தலைவருமான மார்க் கார்னி மற்றைய மூன்று தலைவர்களின் முக்கிய இலக்காக இருந்தமை அவதானிப்புக்குள்ளானது.
கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பியர் பொய்லிவ்ரே, பிளாக் கியூபெக்கோயிஸ் தலைவர் யவ்ஸ்-பிரான்சுவா பிளான்சே மற்றும் புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங் ஆகிய தலைவர்களின் விமர்சனங்களை மார்க் கார்னி சிறப்பாகக் கையாண்டார்.
கனடாவின் பொருளாதாரம், வேலைவாய்ப்பு சார் காப்புறுதி, கியூபெக் மாகாணத்தின் தொழில்துறை முதலான விடயங்கள் நேற்றைய விவாதத்தின் முக்கியமான பேசுபொருட்களாக அமைந்தன.
மற்றைய மூன்று தலைவர்களும் தமக்கிடையே ஒருவரையொருவர் விவாதித்திருக்கக்கூடிய நேரத்திலும், மார்க் கார்னியை விமர்சிக்கும் வகையிலேயே, விவாதத்தின் போக்கினைத் திருப்பினர்.
ஒருவரையொருவர் கேள்வி கேட்கக்கூடிய ஒரு பிரிவில், மூன்று எதிர்க்கட்சித் தலைவர்களும் மார்க் கார்னியிடமே, கேள்வி கேட்டமை குறிப்பிடத் தக்கது.