கனடாவின் பணவீக்கம் மற்றும் அமெரிக்காவுடனான வர்த்தக முரண் நிலை காரணமாக, கனடா மத்திய வங்கி வட்டி வீதத்தை மாற்றாது என்று தெரியவருகின்றது.
இந்த நிலையில் குறித்த வட்டி வீதமானது தொடர்ந்தும் 2.75 சதவீதமாகவே பேணப்படும் என நம்பப்படுகின்றது.
தொடர்ச்சியாக ஏழு முறை வட்டி வீதத்தைக் குறைத்துள்ள நிலையில், கனடா மத்திய வங்கி தற்போது மீண்டும் அதனைக் குறைக்காது என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
கனடா மத்திய வங்கி எதிர்பார்த்ததை விடவும், அன்றாடப் பொருட்களின் விலைகள் அதிகமாக உயர்ந்துள்ள நிலை காணப்படுகின்றது.
இதனைக் கருத்திற் கொண்டே, வட்டி வீதத்தை மாற்றத் தேவையில்லை என்ற முடிவு எட்டப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, அமெரிக்க டொலருடன் ஒப்பிடும்போது கனடிய டொலர் தற்போது வலுப்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.