கனேடியப் பொதுத் தேர்தலுக்கு முன் தாங்கள் ஏற்கனவே எடுத்துவைத்துள்ள தேர்தல் சார் முடிவுகளை மாற்றிக்கொள்ளும் இளம் வாக்காளர்கள் அதிகம் உள்ள மாகாணமாக கியூபெக் உள்ளது.
கனடாவின் மற்ற எந்த மாகாணத்தையும் விட கியூபெக்கில் உள்ள இளம் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்ற தீர்மானத்தை மாற்றிக் கொள்வதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று ஒரு புதிய ஆய்வு காட்டுகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை, இது குறித்த தகவல்களை Léger survey சேகரித்தது.
அதன்படி, 18 முதல் 34 வயதுக்குட்பட்ட கியூபெக் வாக்காளர்களில் 50 சதவீதம் பேர் தாங்கள் யாருக்கு வாக்களிப்பது என்ற தீர்மானத்தை மாற்றிக்கொள்ளும் மனநிலையில் உள்ளனர்.
மற்ற எந்த மாகாணத்திலும் உள்ள இதே வயதுடைய வாக்காளர்களின் சதவீதத்தை விட, இது சுமார் 10 சதவீதம் அதிகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறவிருக்கும் கனேடியத் தேர்தலுக்கு முன் கணிசமான எண்ணிக்கையிலான இளம் கியூபெக் வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என, இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்காமல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.