தற்போது குறிப்பிட்ட நபர் அனுப்பும் செய்திகளுக்கு மட்டும் Notification பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், WhatsApp குழுவில் எத்தனை பேர் Online இல் உள்ளனர் என்பதை காட்டும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
உங்களது இணைய இணைப்பு சரியாக இருந்து, நீங்கள் குழுவை திறக்காமல் இருந்தால், நீங்கள் உள்ள குழுக்களில் நீங்கள் Online இல் இருப்பது காட்டப்படும்
அதே நேரம், பயனர்களின் தனியுரிமையை கருத்தில் கொண்டு Online செயற்பாட்டை மறைக்கும் வசதியையும் அளிக்கிறது. Online visibility ஐ Off செய்துவிட்டு, Online இல் இருந்தாலும் பெயர் குழுவில் Online இல் காண்பிக்காது.
பயனர்கள் இப்போது குழு மற்றும் தனிப்பட்ட chat இரண்டிலும் நிகழ்வுகளை (Event) உருவாக்கி நிர்வகிக்கலாம்.
நீங்கள் பயணத்தில் இருக்கும் போது குரல் செய்திகளை கேட்க முடியாது. குரல் செய்திகளை, எழுத்துச் சுருக்கமாக பெறும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Video அழைப்பின் போது, Pinch to Zoom என்ற வசதி சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் Video அழைப்பில் எதிரே உள்ளவரை நெருக்கமாக Zoom செய்து பார்க்க முடியும்.
WhatsApp இல் அனுப்பப்படும் Photos மற்றும் Videos போன்றவற்றை, பெறுநர் தனது Mobile இல் சேமிப்பதைத் தடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
தனிப்பட்ட புகைப்படங்களை வைத்து மிரட்டி குற்றச்செயல்களில் ஈடுபடுவது, தவறுதலாக அனுப்பப்பட்ட முக்கிய கோப்புகள் கசிவது போன்ற சூழலில் தனியுரிமை தொடர்பான இந்த அம்சம் விரைவில் அறிமுகப் படுத்தப்படவுள்ளது.