ஒவ்வொரு காய்கறிகளிலும் வெவ்வேறு விதமான சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன.
அந்த வகையில், அனைவரும் விரும்பியுண்ணும் ப்ரொக்கோலியில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறதெனப் பார்ப்போம்.
சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த ப்ரக்கோலி இனம் தோன்றியதாகக் கூறப்படுகிறது.
இத்தாலிய வார்த்தையான புரோக்கோலோவிலிருந்து இந்தப் பெயர் தோன்றியுள்ளது.
கோலிஃப்ளவரைப் போல் தோற்றம் கொண்டுள்ள இதில் பூவாக மலரும் பகுதி பச்சை நிறத்தில் காட்சியளிக்கும்.
ப்ரக்கோலியை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
தசை வளர்ச்சிக்கு உதவும். எலும்புகள் வலுவடையும்.
இதிலிருக்கும் விட்டமின் சி, கே, பி9, புரதம், கல்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து போன்றன உடலுக்கு தேவையான சக்தியை வழங்குகின்றன.
புற்றுநோய் ஆபத்தைக் குறைக்கும்.
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதய நோய்கள் வராமல் தடுக்கும்.
