Mobile Phone வாங்கிய சில நாட்களுக்குள்ளேயே Battery சம்பந்தப்பட்ட பிரச்சினை வருகிறது என்றால், Phone இன் அமைப்பில் அல்லது நாம் Charge செய்யும் முறையில் ஏதோ தவறு உள்ளது என்று அர்த்தம்.
அடிக்கடி Phone ஐ Charge செய்வதும், Charge முழுமையாவதற்கு முன்பே அதனை எடுத்து விடுவதும் நல்லதா ? கெட்டதா? என்பதைப் பற்றி அறிந்துகொள்வோம்.
உண்மையில் Phone ஐ சிறிது நேரம் பயன்படுத்திவிட்டு மீண்டும் Charge போடுவதும், பின்னர் மீண்டும் பயன்படுத்தத் தொடங்கி விட்டு Charge சிறிது குறைந்ததும் மறுபடி Charge போடுவதும் தவறாகும்.
இன்றைய நவீன Phone Battery லித்தியம் மற்றும் அயன் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
இதன் வாழ்நாள் சுமார் இரண்டிலிருந்து மூன்று வருடங்கள் வரை இருக்கும். கிட்டத்தட்ட 300 இல் இருந்து 500 முறை Charge செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் இதன் Battery திறன் ஆனது 20% வரை குறைந்து விடும். நமது Phone ஐ முழுமையாக Charge செய்த பின்பு அதன் Battery 20%க்கு குறையும் வரை பயன்படுத்திய பின்பு, அதனை மீண்டும் Charge செய்வதும், அவ்வாறு Charge போட்ட பின்பு அடிக்கடி அதனை Charge இலிருந்து எடுத்து பயன்படுத்துவதையும் முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.
உங்களுடைய Battery நீண்ட காலம் உழைக்க வேண்டும் எனில், அதன் Battery சதவீதமானது 20 சதவீதத்திற்கு குறைவாகவோ அல்லது 80 சதவீதத்திற்கு அதிகமாகவோ இருக்கும்போது Charge போடக்கூடாது. ஏனெனில் லித்தியம் மற்றும் அயான் கொண்டு தயாரிக்கப்படும் Batteryகளை அடிக்கடி முழுமையாக Charge செய்யக் கூடாது.
அவ்வாறு அடிக்கடி முழுமையாக Charge செய்யும் பட்சத்தில் அவை சூடாகும் வாய்ப்புகள் அதிகமாகும். Battery சதவீதம் பூச்சியத்திற்கு வரும் வரையும் நாம் அதனை பயன்படுத்தக் கூடாது.
அவ்வாறு பூச்சியத்திற்கு வரும் வரை நாம் Charge போடாமல் இருந்தால் அவை Battery திறனைக் குறைத்து விடும். முடிந்த அளவு சரியான அளவிலேயே உங்கள் Phone ஐ Charge செய்து வந்தால் நீண்டகாலம் பயன்படுத்தலாம்.