மடு கல்வி வலயத்திட்கு உட்பட்ட மன் கள்ளியடி அ .த . க பாடசாலையின் வருடாந்த திறனாய்வு போட்டி நேற்று(25) சிறப்பாக நடைபெற்றுள்ளது .
பாடசாலையில் மைதானத்தில் 1.30 மணியளவில் சிறப்பாக ஆரம்பித்த குறித்த வருடாந்த திறனாய்வுப் போட்டி பாடசாலையின் அதிபர் திரு. இ.லோறன்ஸ் தலைமையில் இடம்பெற்றுள்ளது .
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பிரதி கல்வி பணிப்பாளர் s. மதியழகன் அவர்களும் சிறப்பு விருந்தினராக திரு. A. கோமஸ் பெரேரா
(ஆசிரிய ஆலோசகர் ) அவர்களும், கௌரவ விருந்தினராக, அருட்தந்தை. அவலின் அடிகளார் ( பங்கு தந்தை அந்தோனியார் புரம் ) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மேலும் குறித்த நிகழ்வில் அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள் பழைய மாணவர்கள், புலம்பெயர் பழைய மாணவர்கள், பெற்றோர்கள் என அனைவரின் பங்கேற்புடனும் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.