Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டம்

பிப்ரவரி 26, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து மீன்பிடிக்கச் சென்று எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள 32 மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவர்கள் வரும் வெள்ளிக்கிழமை முதல் தங்கச்சிமடத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக இன்று நடந்த மீனவர்கள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

முன்னதாக கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை கண்டித்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து இன்று இரண்டாவது நாளாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

தமிழ்நாடு மாநிலம் ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 32 மீனவர்கள் அவர்களின் அதி நவீன தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் 5 படகுடன் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடற்படையினரால் குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலை மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 32 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை (07-03-2025) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டார்.

இந்த நிலையிலே குறித்த மீனவர்களை விடுதலை செய்யக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து இன்று இரண்டாவது நாளாக ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

முந்தைய செய்தி மினுவாங்கொடையில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்
அடுத்த செய்தி சிறப்பாக இடம் பெற்ற மன் கள்ளியடி அ .த . க பாடசாலையின் வருடாந்த திறனாய்வுபோட்டி.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

தொல்லியல் இழுபறியால் கவனிப்பாரற்றிருக்கும் நிலாவரை

ஜனவரி 8, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பாக்கு நீரிணை நீந்தி கடந்த மாற்றுத்திறனாளி

ஏப்ரல் 7, 2026
1
இலங்கை

கிளிநொச்சி உள்ளூராட்சி சபைகளில் கட்டுப்பணத்தை செலுத்திய தேசிய மக்கள் சக்தி…

மார்ச் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

அநுராதபுரத்தில் மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து சாரதி மீது கொடூர தாக்குதல்!

ஜூலை 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?