இரத்தினபுரி போதனா மருத்துவமனையின் மருத்துவர்களால் மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று நண்பகல் மீளப்பெறப்பட்டதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையின் பணிப்பாளரை அவரது பதவியில் இருந்து நீக்கி, சுகாதார அமைச்சுக்கு மீண்டும் நியமித்து சுகாதார அமைச்சின் செயலாளர் கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
