கடந்த பெப்ரவரி 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் தடைக்கான காரணத்தை இலங்கை மின்சார சபை வௌியிட்டுள்ளது.
அதன்படி, மின் பரிமாற்றத்தில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக சபை தெரிவித்துள்ளது.
எனவே மீண்டும் இவ்வாறான நிலை ஏற்படுவதைத் தடுக்க குறுகிய மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின் தடை குறித்த விசாரணையைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றை வௌியிட்டு இலங்கை மின்சார சபை இதனை குறிப்பிட்டுள்ளது.
மின் கட்டணத்தின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்த உடனடி மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை செயல்படுத்தியுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 9ஆம் திகதி அன்று காலை 11.13 மணிக்கு ஏற்பட்ட நாடு தழுவிய மின் தடையின் போது பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கும் வருத்தம் தெரிவித்துள்ளது.