முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு தொட்டியடி பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் தொடர்ச்சியாக அப்பகுதியில் சிலர் மேற்கொண்டு வந்துள்ளனர்.
இதனை அவதானித்த அப்பகுதி மக்கள் அவர்களிடம் சட்டவிரோத செயற்பாட்டை நிறுத்துமாறு பலமுறை தெரிவித்தும் தொடர்ச்சியாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதன் காரணமாக அப்பகுதி இளைஞர்கள் உள்ளிட்டோர் சட்டவிரோத கசிப்பினை பயன்படுத்திவிட்டு குடும்பத்தகராறு மற்றும் வீதியில் போக்குவரத்தில் ஈடுபடுபவருக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி வந்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
சட்டவிரோத கசிப்பினை பயன்படுத்துவதன் காரணமாக பல இளைஞர்கள் தற்பொழுது விளையாட்டுகளிலும் பங்கு கொள்ள முடியாத நிலையில் காணப்படுகின்றனர்
தமது பகுதியில் இருந்து சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை முற்று முழுதாக நிறுத்தும் நடவடிக்கையில் அண்மைக்காலமாக மேற்கொண்டு வருகின்றனர்.
அதில் ஓர் அங்கமாக இன்றைய தினம் 05.03.2026 சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடைபெற்ற பகுதியினை இளைஞர்கள் மற்றும் அப்பகுதி பொது அமைப்புகள் இணைந்து சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த நடவடிக்கையின் போது 600 லீற்றருக்கு மேற்பட்ட மேற்பட்ட கோடா மற்றும் கசிப்பு என்பனவற்றை மக்கள் கைப்பற்றியதுடன் குறித்த தடையை பொருட்களை புதுக் குடியிருப்பு பொலிசாரிடம் ஒப்படைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
