அமெரிக்காவின் அதிபராக கடந்த மாதம் குடியரசுக்கட்சியின் டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். டொனால்டு டிரம்ப் அதிபராக பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுதல், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுதல், அமெரிக்காவின் தென்பகுதியில் மெக்சிகோ எல்லைகளில் அவசர நிலையை பிரகடனப்படுத்துதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
மேலும், பல்வேறு நாடுகள் மீதும் அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடி வரி விதிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீதமும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதமும் வரி விதித்து அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். கனடிய இறக்குமதிக்கு எதிரான வரி அடுத்த வாரம் விதிக்கப்படும் என அமெரிக்கா ஜனாதிபதி தெரிவித்தார்.கனடிய இறக்குமதிக்கு எதிரான 25 சதவீத வரி ஒரு மாத கால இடை நிறுத்தத்திற்கு பின்னர் அடுத்த வாரம் விதிக்கப்படுகிறது.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இந்த தகவலை வெளியிட்டார்.கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு 25 சதவீத வரி அடுத்த வாரம் விதிக்கப்படும் என டொனால்டு டிரம்ப் திங்கட்கிழமை (24) உறுதிப்படுத்தினார்.
திட்டமிட்டபடி இந்த நகர்வு முன்னெடுக்கப்படுகிறது என அவர் கூறினார்.இந்த மாத ஆரம்பத்தில், எரிசக்தி தவிர ஏனைய கனடிய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்போவதாகடொனால்டு டிரம்ப்அச்சுறுத்தினார்.
ஆனாலும் எல்லை பாதுகாப்பு நடவடிக்கையை பலப்படுத்த பிரதமர் J ஜஸ்டின் ட்ரூடோ ஒப்புக் கொண்டதையடுத்து இறுதி நேரத்தில் தனது வரி விதிப்பு எச்சரிக்கையை அவர் 30 நாட்கள் பிற போட்டிருந்தார்.