தமிழரசு, தமிழ்க் காங்கிரஸ் தவிர்ந்த சகல தமிழ்த் தேசியத் தரப்புகளும் தேர்தலில் ஐக்கியப்பட இணக்கம் என்றும் இன்றைய இணுவில் கூட்டத்தின் முடிவு சங்குச் சின்னத்தில் இறங்கத் தீர்மானம் என்றும் கூறப்படுகின்றது
விரைவில் நடைபெறப் போகும் உள்ளூராட்சித் தேர்தலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இலங்கைத் தமிழரசு கட்சி மற்றும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் ஆகிய இரண்டும் தவிர்ந்த ஏனைய தமிழ்த் தேசியக்கட்சி தரப்புக்களும் ஒன்றுபட்டு ஓரணியில் செயற்படுவதற்கும் ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணியின் சங்குச் சின்னத்தில் சேர்ந்து களமிறங்கவும் இன்று கொள்கையளவில் பூர்வாங்க இணக்கம் கண்டன.
இன்று முற்பகல் இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள ஜொலி மண்டபத்தில் நடைபெற்ற இக்கட்சிகள் மற்றும் தரப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில் இவ்வாறு பூர்வாங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக அறிய முடிகின்றது.