2025 பெப்ரவரி 16 ஆம்திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2025 பெப்ரவரி 15 ஆம் திகதி காலை 11.24 மணிக்கு கனடிய காலநிலை மையத்தால் வெளியிடப்பட்டது.
அந்த வகையில் நாளைய தினம் கனடாவின் மொன்றியல் தீவை அண்மித்த பகுதியில் நிலவக்கூடிய காலநிலை குறித்து எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது. சுமார் 30 சென்ரி மீற்றர் தொடக்கம் 40 சென்ரி மீற்றர் வரையில் பனிப்பொழிவு நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
குறிப்பாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆரம்பமாகின்ற கடுமையான பனிப்பொழிவு திங்கள் கிழமை வரை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை மற்றும் மதிய வேளைகளில் சாரதிகள் மிகவும் அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.