கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி பதவி விலகியதை தொடர்ந்து,விரைவில் கனடாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதான கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர்.
புதிய ஜனநாய கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை வழிநடத்தும் ஜெனிபர் ஹோவர்ட் “தேர்தல் நேரம் மற்றும் திட்டமிடல்” என்ற தலைப்பில் புதன்கிழமை (12) சுமார் 140 நியமன வேட்பாளர்களுக்கும் அவர்களின் ஏற்பாட்டுக் குழுக்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.
மேலும் அந்தக் கடிதத்தில் மார்ச் 9 ஆம் திகதி மார்க் காரனே அடுத்த லிபெரல் தலைவராக வேற்றிபெறுவதக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன எனவும் மார்க் காரனே தலைமை பதவியை வென்றால், விரைவில் ஒரு தேர்தலுக்கு அழைப்பு விடுக்க அவர் உத்தேசித்துள்ளதாக தெரிய வருகிறது. ஆகவே மார்ச் 10 திகதிக்குள் இந்த திடீர் தேர்தல் நடைபெறுவதற்கு தயாராக இருக்குமாறு அந்தக் கடிதத்தில் அனைத்து வேட்பாளர்களுக்கும் பிரச்சார ஊழியர்களுக்கும் அவர் எச்சரித்துள்ளார்.