Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

எம்.பி. சாணக்கியனுக்கு ஒதுக்கிய 400 மில்லியனில் மோசடி இடம்பெற்றிருக்கின்றது – அன்ரனிசில் ராஜ்குமார்

பிப்ரவரி 14, 2025
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கிய 400 மில்லியன் ரூபா நிதியில் குளத்தை விளையாட்டு மைதானம் எனவும் பதிவு செய்யப்படாத பல இடங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு நிர்மாணப்பணி முடியாமல் முடிவுற்றதாக பணம் பெறப்பட்டு பாரிய நிதி மோசடி இடம்பெற்றுள்ளது. எனவே இதற்கு விசாரணைக்குழு ஒன்றை நியமித்து இதில் தவறிழைத்த அரச அதிகாரிகள் அத்தனை பேரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என ஈபிடிபி கட்சி மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்ரனிசில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்தார். இதில் அரச அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக பெரும்பாலான நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.

குளுவாஞ்சிக்குடி ஏருவிலில் விளையாட்டு மைதானத்துக்கு 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டு மைதானம் பூர்த்தி செய்யப்பட்டு அதற்கான முழு பணமும் வழங்கியுள்ளதாக தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக காட்டப்படுகின்ற இடத்தை தேடி களவிஜயம் செய்தோம். அது கோடைமேடு சிறுப்பிட்டிக்குளம் அந்த குளத்தில் மீனவர் ஒருவர் தோணியில் மீன்பிடித்துக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தோம்.

ஏனனில் அது ஒரு விளையாட்டு மைதானம் அல்ல அது ஒரு அரசகுளம் அதற்கு 50 இலட்சம் ரூபாவை ஒதுக்கி விளையாட்டு மைதானம் என காட்டுகின்றனர். இது போன்று பல விடயங்கள் இருக்கின்றன. அதில் கோட்டை கல்லாற்றிலே கூட்டுறவுக்கு சொந்தமான கட்டிடம் புனர்நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக 50 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடமும் பூர்த்தி செய்யப்படாமல் இருக்கின்றது.

இவ்வாறு பல இடங்களுக்கு சென்று பார்த்தால் அரச அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக இந்த வேலைத்திட்டங்கள் அரையும் குறையுமாக இருக்கின்றது. ஆனால் தகவல் அறியும் சட்டமூலமாக பெறப்பட்ட ஆவணங்களிலே அனைத்து திட்டங்களும் பூர்த்தி செய்யப்பட்டதாகவும் அதற்கான முழு பணமும் வழங்கப்பட்டதாக காட்டப்பட்டுகின்றது.

எந்தவிதமான திட்டமிடலும் இன்றி பதிவு இலக்கம் இல்லாது அதாவது ஜனாதிபதியின் செயலக சுற்று நிருபத்துக்கு அமைய பதிவு செய்யப்பட்டவைக்கு வழங்கப்படவேண்டும் ஆனால் அது குளம் என தெரிந்தும் மைதானம் என இதையார் சென்று பார்வையிட்டார்?

மைதானத்தை நிர்மாணிக்கும் ஒப்பந்தத்தை எடுத்த கிராம அபிவிருத்தி சங்க தலைவருக்கு இது ஒரு குளம் என தெரியவில்லையா? இதை மேற்பார்வை செய்த அரச உத்தியோகத்தர் யார்? பதிவு இலக்கத்தை பார்வையிடாது இந்த அரச அதிகாரிகள் ஏன் இந்த 50 இலச்சம் ரூபா நிதியை வழங்க சம்மதித்தனர். இது அரச அதிகாரிகளினது கவனயீனம் காரணமாக மக்களுடைய வரிப்பணமான 50 இலச்சம் ரூபா வீணடிக்கப்பட்டு மோசடி இடம்பெற்றுள்ளது.

இதுமட்டுமல்ல இவ்வாறு எங்கெல்லாம் ஒதுக்கப்பட்டதோ அங்கெல்லாம் நிதியில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளது. இந்த அரச அதிகாரிகள் சரியான முறையில் கையாளவில்லை அதனால் தான் இரா.சாணக்கியனுக்கு வழங்கப்பட்ட நிதியும் வீணடிக்கப்பட்டதாக கருதுகின்றோம்.

எனவே எதிர்காலத்தில் இவ்வாறான நிதி ஒதுக்கிடும் போது அரச அதிகாரிகள் மிகவும் கவனமாக செயற்பட்டு மட்டக்களப்பு மாவட்டத்துக்கு அபிவிருத்திக்கு வருகின்ற பணத்தை மிக தேவை தெரிந்து அத்தியாவசிய தேவைகள் வாழ்வாதார திட்டங்களை ஊக்கிவிக்க வேண்டும் என அரச அதிகாரிகளை கேட்டுக் கொள்கின்றோம்.

அதேவேளை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும் வெளிநாட்டு பிரதி அமைச்சருமான அருன் ஹேமச்சந்திராவிடம் வேண்டிக் கொள்வது இந்த நிதி ஒதுக்கீட்டில் பாரிய மோசடிகள் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமல்ல பதிவு செய்யப்படாத இடங்களுக்கு நிதிகள் வழங்கப்பட்டு இந்த 400 மில்லியன் நிதி ஒதுக்கீட்டிலே அரச அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக முற்று முழுதாக வீணடிக்கப்பட்டுள்ளது.

எனவே இது தொடர்பாக விசாரணைக்குழு ஒன்றை நியமித்து துரித விசாரணைகளை மேற்கொண்டு இதில் தவறிழைத்த அரச அதிகாரிகள் அத்தனை பேரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

 

முந்தைய செய்தி வடக்கு மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படும் என ஆளுனர் உறுதி – ஜெகதீஸ்வரன் எம்.பி
அடுத்த செய்தி நாமல் ராஜபக்ஷவின் சட்டப்படிப்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் – சி.ஐ.டிக்கு பணிப்புரை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

காங்கேசன்துறையில் மரநடுகை நிகழ்வு

டிசம்பர் 9, 2025
இலங்கை

சம்மாந்துறையின் விசேட சோதனை – 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!

செப்டம்பர் 27, 2025
இலங்கை

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் நாளை முதல் வைப்பிலிடப்படும்!

ஆகஸ்ட் 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழ். வேலணை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு வீதி விதிமுறைகள் தொடர்பில் விழிப்புணர்வு!

நவம்பர் 6, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?