பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எவ்வாறு சட்டப் பட்டம் பெற்றார் என்பது குறித்து விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சட்டப் பட்டப் படிப்பை மேற்கொண்டதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் பல புகார்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தக் கோரி பல தரப்பினர் ஏற்கனவே குற்றப் புலனாய்வுத் துறையிடம் புகார் அளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.