Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கிணற்றிலிருந்து அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம்

மார்ச் 20, 2026
படிக்க 3 நிமிடங்கள்
SHARE

வவுணதீவு இருந்து மட்டக்களப்பு நகருக்கு 2 1/2 வயது குழந்தையுடன் நேற்று வியாழக்கிழமை சென்று காணாமல் போன இளம் தாய் ஒருவர் தாந்தாமலை நெல்லிகாடு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்தும் குழந்தை வவுணதீவு கொத்தியாவலை பிரதேச வயலில் இருந்து உயிருக்கு போராடிய நிலையில் உயிருடன் இன்று வெள்ளிக்கிழமை (20) மீட்கப்பட்டதுடன் அந்த கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதையடுத்து அங்கு பெரும் பரப்பு ஏற்பட்டுள்ளது

இது பற்றி தெரியவருவதாவது,

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கொத்தியாவலை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளம் தாய் ஒருவர் அவரது 2 அரை வயது குழந்தைக்கு ஏற்பட்ட காச்சலுக்கு மருந்து எடுப்பதற்காக நேற்று வியாழக்கிழமை காலை வீட்டில் இருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சென்றவர் இரவாகியும் வீடு திரும்பாததையடுத்து உறவினர்கள் அவரை தேடிவந்ததுடன் வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் சம்பவதினமான இன்று வெள்ளிக்கிழமை காலை கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள தாந்தாமலை நெல்லிக்காடு பகுதியில், மாட்டுபட்டியில் பால் எடுப்பதற்காக சிலர் சென்று கொண்டிருந்தபோது அந்த பகுதியில் பிரதேசத்தில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் இருந்து அலறல் சத்தம் கேட்டதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது பெண் ஒருவர் கழுத்தளவு நீரில் உயிருக்காக போராடிக் கொண்டிருப்பதை கண்டனர்.

இதனையடுத்து பொலிசாருக்கு அறிவித்ததையடுத்து பெண்ணை மீட்கப்பட்ட போது அவர் கிணற்றில் அழுகிய நிலையில் சடலங்கள் இருப்பதாக தெரிவித்த நிலையில் அவரை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதேவேளை குறித்த குழந்தை கொத்தியாவலையில் உள்ள அவரது வீட்டில் இருந்;து சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் கொண்ட வயல் பகுதியில் கைவிடப்பட்டு அழுது கொண்டிருந்த நிலையில் உயிருடன் மீட்கப்பட்டு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் குழந்தை மீட்கப்பட்ட பகுதியில் இருந்து சுமார் 25 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பகுதி கிணற்றில் இருந்து தாய் மீட்கப்பட்டதையடுத்து மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து பொலிசார் நீதிமன்ற அனுமதியை பெற்று தடவியல் பிரிவு பொலிசார் வரவழைக்கப்பட்டு கிணற்றில் இருந்த அழிகிய நிலையில் இருந்த சுமார் 20 வயதுக்கு உட்பட்ட பெண் ஒருவரின் சடலம் ஒன்றை மீட்டு பிரேத பரிசோதணைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைத்தனர்.

இதேவேளை இச் சம்பவத்தில் உயிர் தப்பிய தாய் தான் சம்பவதினம் மட்டு போதனா வைத்தியசாலைக்கு சென்று மருந்து எடுத்து கொண்டு ஈட்டு கடையில் 34 ஆயிரம் ரூபாவுக்கு அடைவில் இருந்த தங்க ஆபரணம் ஒன்றை மீட்டெடுத்துக் கொண்டு பஸ்வண்டியில் ஏறி வவுணதீவு கொத்தியாவலையில் உள்ள தனது வீட்டிற்கு பிரயாணித்து தாண்டியடி பகுதியில் பஸ்வண்டியில் இருந்து இறங்கி வீடு நொhக்கி சென்றதாகவும் அதன் பின்னர் என்ன நடந்தது என பொலிசாரின் ஆரம்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேவேளை இச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட அவர் பெரும் அதிர்சியடைந்து பயந்த நிலையில் இருந்து வருவதால் அவரிடம் தொடர்ந்து தற்போது விசாரணை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த இளம் தாய் கடத்தப்பட்டாரா? கொள்ளையர்கள் வாகனத்தில் கடத்தி சென்றனரா? தங்க ஆபரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதா? என பல கோணத்தில் கொக்கட்டிச்சோலை, வவுணதீவு, பொலிசார், மாவட்ட புலனாய்வு பிரிவினர், விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி மன்னார் வைத்தியசாலையில் நவீன ரக வெளிநோயாளர் பிரிவு அமைக்க தீர்மானம்
அடுத்த செய்தி வடமராட்சி கிழக்கில் யானைகள் அட்டகாசம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

பெக்கோ சமனின் மனைவியின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

அக்டோபர் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

யாழில் வீடொன்றில் கசிப்பு உற்பத்தி – ஒருவர் கைது!

ஜூன் 2, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வென்னப்புவ பகுதியில் குப்பைத் தொட்டியிலிருந்து சடலமொன்று மீட்பு!

ஜூலை 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வவுனியாவில் மீட்கப்பட்ட சடலத்தை ஒப்படைப்பதில் தாமதம்…

ஏப்ரல் 17, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?