அனைத்துலக தமிழ் இளையோர் மாநாட்டை முன்னிட்டு மலேசியா திரங்காணு பல்கலைக்கழகம் நடாத்திய அனைத்துலக சொற்போர் விவாத போட்டியில் யாழ்ப்பாண மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை கொண்ட அறிவியல் தமிழ் அணி இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
அண்மையில் நடைபெற்ற குறித்த போட்டியில், இலங்கையில் இருந்து தெரிவாகிய யாழ்ப்பாண மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை கொண்ட அறிவியல் தமிழ் அணி. முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் சுற்றுக்களில் முறையே இந்தியா சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளை வெற்றி கொண்டு அரையிறுதியில் சிங்கை நாட்டுடனும் வெற்றி பெற்றது.
அதனை தொடர்ந்து, இறுதிப்போட்டியில் இந்திய நாட்டு அணியுடன் மோதி 3:2 எனும் விகிதாசாரத்தில் இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்டது.
இப்போட்டியில் , யாழ் . பல்கலைக்கழக தொழிநுட்ப பீட மாணவன் மோகனராஜ் ஹரிகரன், வரலாற்றுத்துறை மாணவனான சிவகுமார் திசான் , மொழிபெயர்ப்பு கற்கைகள் துறை மாணவனான யூலியட் கலைச்செல்வன், கிழக்கு பல்கலைக்கழகம் மருத்துவ பீட மாணவியான அபிராமி நகுலகுமார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.