Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வடக்கு மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படும் என ஆளுனர் உறுதி – ஜெகதீஸ்வரன் எம்.பி

பிப்ரவரி 14, 2025
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

வடக்கு மாகாண கல்வி அபிவிருத்தி தொடர்பில் கூடிய கவனம் செலுத்தப்படும் என வடக்கு மாகாண ஆளுனர் நா.வேதநாயகம் உறுத்தியளித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்று (13.02) வடக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தில் ஆளுனருக்கும், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்திற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வடக்கு மாகாணத்தின் வலயங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் மாகாண பிரதிநிதிகள் உட்பட இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் அமைப்பாளரும், பிரதி அமைச்சருமான சுந்தரலிங்கம் பிரதீப் அத்தோடு வடக்கு மாகாண இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் பிரதாஸ் உட்பட உறுப்பினர்கள் வடக்கு மாகாண ஆளுனர், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் ஆகியோருடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது ஆசிரியர்கள் இடமாற்றம், ஆசிரியர்கள் இடமாற்றத்தின் போது எதிர்நோக்கப்படும் பிரச்சனைகள், ஆசிரியர் நலன்புரி செயற்பாடுகள் மற்றும் அதிபர் சேவையில் உள்ள பிரச்சனைகள் அதிபர் சேவை நியமனத்தின் போது காணப்பட்ட பிரச்சனைகள் என்பன இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.

அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக ஆளுனர் வாக்குறுதியளித்திருந்தார். அத்தோடு பல்வேறு பிரச்சனைகளும் எமது பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டது. அதனை சாதகமான முறையில் தீர்த்து வைப்பதாக ஆளுனர் கூறினார்.

இந்த கலந்துரையாடல் சிறப்பான முறையில் அமைந்திருந்தது. எதிர்காலத்தில் இவ்வாறான கலந்துரையாடல்கள் இடம்பெற வேண்டும் என ஆளுனர் கூறியிருந்தார். எதிர்காலத்தில் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை கட்டமைப்பில் உள்ள பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்படும். இதன் மூலம் வடக்கு மாகாண கல்வியில் உள்ள பல பிரச்சனைகளை தீர்க்க முடியும் எனத் தெரிவித்தார்.

முந்தைய செய்தி வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரிககள் மூவருக்கு இடமாற்றம்.
அடுத்த செய்தி எம்.பி. சாணக்கியனுக்கு ஒதுக்கிய 400 மில்லியனில் மோசடி இடம்பெற்றிருக்கின்றது – அன்ரனிசில் ராஜ்குமார்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 208 சிங்கள தாதியர்கள் புதிதாக நியமனம்…..

மே 28, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மணற்காடு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த மனிதவுரிமை ஆணைக்குழு

மார்ச் 24, 2026
இலங்கை

யாழில். இருந்து கேதீஸ்வரத்திற்கு பாத யாத்திரை.

பிப்ரவரி 18, 2025
இலங்கை

நாயை தூக்கிலிட்டு கொலை செய்த பெண் கைது…

பிப்ரவரி 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?