Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வடக்கு அபிவிருத்திக்கு ஜப்பான் தொடர்ந்து உதவ வேண்டும்.

பிப்ரவரி 13, 2025
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் தற்போதைய அரசாங்கம் சாதகமான நிலைப்பாடுகளைக் கொண்டுள்ள நிலையில், ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து மேலும் உதவிகளை எதிர்காலத்திலும் எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன், ஐ.நா. முகவர் அமைப்பான யு.என்.எப்.பி.ஏ. நிறுவனத்தால் ஊர்காவற்றுறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் புனரமைக்கப்பட்ட மத்திய சிகிச்சை நிலையம் நேற்றைய தினம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் இஷோமார்ரா அகியோ, யு.என்.எப்.பி.ஏ. நிறுவனத்தின் இலங்கைக்கான குழுத் தலைவர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன, வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலர் திருமதி ப.ஜெயராணி, வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் சமன் பத்திரன ஆகியோரும் பங்கேற்றனர்.

நிகழ்வில் ஆளுநர் உரையாற்றும் போது,

ஜப்பானிய மக்களுக்கு வடக்கு மக்கள் சார்பாக இந்த இடத்தில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஜப்பானிய அரசாங்கத்தால் தொடர்ச்சியாக பல்வேறு உதவிகள் எமக்கு கடந்த காலத்திலும் கிடைக்கப்பெற்றிருந்தன. எதிர்காலத்திலும் அந்த உதவிகள் தொடரவேண்டும் என வேண்டிக்கொள்கின்றேன்.

குறிப்பாக தெல்லிப்பழையில் அமைந்துள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கான தேவைப்பாடுகள் அதிகம் உள்ள நிலையில் அது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என்ற கோரிக்கையை இங்கு முன்வைக்கின்றேன்.

அதேபோல வடக்கு மாகாணத்தின் மிக முக்கியமான மருத்துவமனையாக உள்ள யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையை தேசிய மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். அதற்குரிய உள்கட்டுமானங்களுக்கான உதவிகள் தொடர்பிலும் ஆராயுமாறும் இந்தச் சந்தர்ப்பதில் வேண்டுகோள் முன்வைக்கின்றேன்.

அதேநேரம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தனவுடன் உரையாடும்போது எமக்கு ஏற்பட்டுள்ள ஆளணி வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தேன். விரைவில் அதனை மேற்கொள்வதாக அவரும் கூறியிருக்கின்றார்.

அதைச் செயற்படுத்துவதன் ஊடாக எமது மாகாணத்தின் சுகாதார சேவைகளை மேம்படுத்தக் கூடியதாக இருக்கும், என்று ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.

இதேவேளை, வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னாரில் 9 சிகிச்சை நிலையங்கள் இவ்வாறு புனரமைப்புக்காக உள்வாங்கப்பட்டு அவற்றில் 8 நிலையங்களின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. அவற்றுக்கான சான்றிதழ்களும் இந்த நிகழ்வில் வைத்து கையளிக்கப்பட்டன.

முந்தைய செய்தி மட்டக்களப்பு பட்ஸ் யு.கே அணுசரணையுடன் நிர்மாணித்த வீடுகள் கையளிப்பு.
அடுத்த செய்தி ‘வடக்கு மாகாணத்தின் ஒருங்கிணைந்த துரித அபிவிருத்தித் திட்டம் 2024 – 2026’

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

இரத்தினபுரி மருத்துவர்களால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம் மீளப்பெறப்பட்டது

செப்டம்பர் 4, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

சட்ட விரோத மணல் அகழ்வின் போது துப்பாக்கிச்சூடு(Video)

டிசம்பர் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

எரிபொருள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாட தீர்மானம் – யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

மார்ச் 27, 2026
இலங்கை

2026 வரவுசெலவுத்திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் வலுசக்தித் துறையின் தரப்பினர்களுடன் இன்று இடம்பெற்றது!

செப்டம்பர் 19, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?