உச்சி முதல் பாதம் வரை 160 நோய்களுக்கு கடுக்காய்ப்பொடி மருந்து. மருந்தாக்குவதற்கு முன்பு கடுக்காயின் கொட்டையை நீக்க வேண்டியது முக்கியம்.
உடலில் உள்ள பெரும்பாலான பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு அளிப்பது மட்டுமல்லாமல் சித்த மருத்துவத்தின் தாய் என சித்த மருத்துவர்களால் கடுக்காய் அழைக்கப்படுகிறது. அந்த அளவிற்கு கடுக்காயில் என்ன நன்மைகள் இருக்கிறது நினைக்கிறீர்களா? நிச்சயம் இந்த பதிவு அதற்கான மொத்த விடயங்களையும் அளிக்கும்.
பிஞ்சு கடுக்காய், கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் என, பல வகைகள் உண்டு. கிடைக்கும் இடத்தைப் பொறுத்து பெயர் மாறுபடும். இவை தவிர, காபூல் கடுக்காய், சூரத் கடுக்காய் எனும் வகைகளும் இங்கே கிடைக்கின்றன.செங்கடுக்காய், காசநோயைப் போக்கி மெலிந்த உடலைத் தேற்றி அழகாக்கும். வரிக்கடுக்காய், விந்தணுக்களை உயர்த்தி பலவித நோய்களையும் போக்கும்.பிஞ்சு கடுக்காய், மலச்சிக்கலுக்கு நிவாரணம் தரும். கருங்கடுக்காய், மலத்தை இளக்குவதுடன் உடலுக்கு அழகும் மெருகும் தரும். பால் கடுக்காய், வயிற்று மந்தத்தைப் போக்கும் என கடுக்காய் வகைகளின் பயனை அன்றே சித்தர்கள் சொல்லியுள்ளனர்.
உச்சி முதல் பாதம் வரை 160 நோய்களுக்கு கடுக்காய்ப்பொடி மருந்து. மருந்தாக்குவதற்கு முன்பு கடுக்காயின் கொட்டையை நீக்க வேண்டியது முக்கியம். பசியின்மையைப் போக்கும் கடுக்காய்:-பசிக்கிறது, சாப்பிட முடியவில்லை என உணவின் மீது வெறுப்பு வரும் அரோசக நோய்க்கு, கடுக்காய் துவையல் சிறந்த மருந்து. கடுக்காயை கஷாயமாக்கி அருந்தினால், மலச்சிக்கல் பிரச்னை தீர்ந்து மலம் இளகும். சர்க்கரை நோய் இல்லாமலேயே அதிகமாக சிறுநீர் கழிக்கும் நோய்க்கும், இந்த துவையல் சிறந்த மருந்து.
ஒரு கடுக்காயின் தோலை பொடி செய்து தினமும் மாலை சாப்பிட, இளநரை மாறும். மூக்கிலிருந்து ரத்தம் கசியும் நோய்க்கு கடுக்காய்த் தூளை நசியமிட்டுச் சரியாக்கியுள்ளனர் சித்த மருத்துவர்கள். துவர்ப்புச் சுவைமிக்க கடுக்காய், மலமிளக்கும். அதே சமயம் ரத்தமாக கழிச்சல் ஆகும் சீதபேதிக்கும் மருந்தாகும் என்பது இன்றளவும் புரிந்து கொள்ளமுடியாத மருத்துவ விந்தை. ஒரே பொருள் மலத்தை இளக்கவும், பேதியை நிறுத்தவும் பயன்படுவது தான் மூலிகையின் மகத்துவம். அதில் உள்ள பல்வேறு நுண்ணிய மருத்துவக் குணமுள்ள பொருட்கள் தேவைக்கேற்றபடி பயனாவது, இயற்கையின் நுணுக்கமான கட்டமைப்பு.
சர்க்கரையைக் குறைக்கும் கடுக்காய்:கடுக்காயை உப்புடன் சாப்பிட்டால், கப நோய்களும், சர்க்கரையுடன் சாப்பிட்டால் பித்த நோயும், நெய்யுடன் சாப்பிட்டால் வாத நோயும், வெல்லத்துடன் சாப்பிட்டால் அத்தனை நோய்களும் அகலும்.கல்லீரல் நோய் உள்ளவர்கள், அதற்கென வேறு எந்த மருத்துவம் எடுத்துக்கொண்டாலும் கடுக்காய் பொடியை நிலக்கடலை அளவு எடுத்து தண்ணீரில் கலந்து சாப்பிடுவது, கல்லீரலைத் தேற்றி காமாலை வராது காத்திடும்.