Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
ஆரோக்கியம்உலகம்

ரத்தம் கொட்ட கொட்ட வாஷிங் மெஷினில் சடலமாக கிடந்த சிறுவன்-இந்தியாவை உலுக்கிய கொடூர கொலை!

செப்டம்பர் 10, 2024
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நெல்லையில் 3 வயது சிறுவன் கொலை செய்து வாஷிங் மெஷினில் மறைத்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் ஆத்துக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்-ரம்யா தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் இரண்டாவது மகன் (3வயது) அங்கன்வாடி மையத்தில் படித்து வந்துள்ளார். அந்த வகையில் இன்று காலை 9.30 மணியளவில் வழக்கம் போல் அங்கன்வாடிக்கு அழைத்து செல்ல ரம்யா சிறுவனைத் தேடியுள்ளார்.

வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுவனைக் காணவில்லை.இதனால் அதிர்ச்சியடைந்த ரம்யா அவரது தெரு முழுவதும் தேடிப்பார்த்துள்ளார். மேலும் அங்கன்வாடி மையத்துக்கும் சென்று தேடியுள்ளார்.

ஆனால் அங்கேயும் சிறுவன் இல்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினருடனும், உறவினர்களிடம் சிறுவனைக் காணாதது குறித்துக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து விக்னேஷ் -ரம்யா இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினர் ஒவ்வொரு வீடாகச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது எதிர்வீட்டு தங்கம்மாள் என்ற பெண் காவல்துறையைக் கண்டதும் பதற்றத்துடன் வெளியே ஓடினார்.

அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது வாஷிங் மெஷினில் ரத்தக்கறையுடன் இருந்த சாக்குப்பையில் 3 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தது தெரியவந்தது.

3 வயது சிறுவனின் தந்தை, தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து அந்தப் பெண்ணிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மகன் விபத்தில் உயிரிழந்த நிலையில் ஈம சடங்கிற்கு எதிர்வீடான விக்னேஷ் – ரம்யா தம்பதி வரவில்லையாம்.

இதனால் அவர் மீது முன்விரோதம் இந்தக் கொலை நடந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும் தனியாக இந்த கொலையை அரங்கேற்றினாரா? இதற்கு பின்னால் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்தி ஆப்பிள் நிறுவனம் தமது புதிய படைப்பான ஐபோன் 16 சீரிஷை இன்று வெளியிடுகிறது.
அடுத்த செய்தி வியட்நாமை தாக்கிய யாகி புயல்.

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada

மரண அறிவித்தல்

unnamed (14)
திருமதி . விஜயலெட்சுமி காளிராசா
கல்முனை
பாலத்தடிச்சேனை
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

பலஸ்தீனம் தங்களுக்கு செந்தமானது – பிரதமர் நெதன்யாகு

செப்டம்பர் 12, 2025
ஆரோக்கியம்

ஹோட்டல் ஸ்டைல் லெமன் சிக்கன் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம் வாங்க…..

பிப்ரவரி 3, 2025
உலகம்

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை-18 மணி நேரத்திற்க்குப் பின் மீட்பு.

செப்டம்பர் 19, 2024
அண்மைய செய்திகள்உலகம்

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு மூவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது!

அக்டோபர் 14, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?