பஞ்சாப் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 29 பேர் உயிரிழந்துள்ளதோடு ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வீடுகளை இழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை இன்றும் பஞ்சாப், ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கனமழைக்கான ஒரேஞ் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசின் தரவுகளின்படி, 1,300 க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதோடு6,582 பேர்122 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக அமிர்தசரஸின் அஜ்னாலா நகரம் முற்றிலும் போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில், ட்ரோன்கள் மூலம் பால்மா மற்றும் உலர் உணவுப் பொருள்களை வழங்கப்பட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இராணுவம், பேரிடர் மீட்புப் படையினர், எல்லைப் பாதுகாப்புப் படையினர் இணைந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து மக்களை மீட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
