தினமும் ஒரு கொய்யாப்பழத்தைச் சாப்பிட்டு வந்தால், உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சி அடையும் அத்துடன் மலச்சிக்கல் இருக்காது.
கொய்யாப் பழத்தை அளவுக்கு அதிகமாகச் சாப்பிடக் கூடாது. ஏனெனில், வாதம், பித்தம் போன்றவை அதிகமாகி தலைசுற்றல் ஏற்படலாம்.
கொய்யாப் பழத்தில் மிக அதிமான மருத்துவப் பயன்கள் உள்ளன.
கொய்யாப் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், உடல் எடையைச் சீரான விகிதத்தில் மேம்படுத்த உதவி செய்கிறது.
கொய்யாப் பழத்தில் அதிகளவான விட்டமின் A C E போன்றவையும், நார்ச்சத்தும் இருப்பதால் சருமம் பொலிவு பெற்று தோல் சுருக்கம் குறைந்து கண் கோளாறுகள் விலகி உடலிற்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.
கொய்யாப் பழம் சாப்பிடுவதால், சளிப்பிரச்சினை மற்றும் இருமல் போன்றவை இல்லாமல் போகும்.
கொய்யாப்பழத்தை சாப்பிடுவதால் பல வழிகளில் இதய ஆரோக்கியம் மேம்படுகின்றது. இது மன அழுத்தத்தை மற்றும் கொழுப்பை குறைக்கிறது.
அத்துடன்,பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வலியைப் போக்குகிறது. புற்றுநோய் அபாயத்தையும் குறைக்கிறது.
கொய்யாப்பழம் அதிக ஊட்டச்சத்துள்ள வெப்பமண்டலப் பழமாகும். ஆகவே, இவை ஆரோக்கியம் மற்றும் அழகுக்கான நன்மைகளை வழங்குகின்றன.