இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு இன்று புதன்கிழமை (5) காலை கொழும்பு விஜேராம வீதியில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது. மேலும், இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசமும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.