பழைய சாதம் சாப்பிடும் பழக்கம் தற்போது குறைந்து வருகிறது. இப்போது உள்ள குழந்தைகள் யாரும் இதை பெரிதாக விரும்புவதில்லை. மாறாக ஃபாஸ்ட் ஃபுட்டை நோக்கி நகர்ந்து செல்கின்றனர். இதனால் சிறு வயதிலேயே அவர்கள் உடல் சமந்தமான பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். எனவே அவ்வபோது காலை வேளையில் பழைய சாதம் சாப்பிட்டாலே நமது உடலை ஒரளவுக்கு பாதுகாத்துக்கொள்ள முடியும். இத்தொகுப்பில் பழைய சாதம் உள்ள நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பழைய சாதத்தில் அப்படி என்ன நன்மை இருக்கிறது என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் (american nutirition association) பழைய சாதத்தில் பெருமைகளையும் பலன்களையும் பட்டியலிட்டிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த அமெரிக்கன் நியூட்ரிஷன் அசோசியேஷன் பழைய சாதம் குறித்த தகவல்களை பட்டியலிட்டது. அவர்கள் குறிப்பிட்டிருந்த நன்மைகள் இதோ.
பழைய சாதத்தில் உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அதிக அளவில் இருக்கின்றன.
காலை வேளையில் இதை சாப்பிடுவதால், வயிறு தொடர்பான பிரச்சனைகள் குணமாகும். உடல் உஷ்ணத்தை போக்கும். நாள் முழுவதும் நம்மை புத்துணர்சியுடன் தோன்ற வைக்கும்.
பழைய சாதம் நார்ச்சத்து தன்மையை கொண்டிருப்பதால் மலச்சிக்கலை நீக்கும். புதிய நோய்த்தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கும். உடல் சோர்வை விரட்டும்.
ஒவ்வாமை மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கு பழைய சாதம் தீர்வு தரும். இளமை தோற்றத்தை தக்க வைக்க உதவும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. பழைய சாதம் வெளிநாட்டினருக்கு வேண்டுமானால் அதிசயமாக இருக்கலாம். ஆனால் நமக்கு பாரம்பரிய உணவாகும். எனவே அவ்வபோது பழைய சாதம் சாப்பிட்டு உடலை பாதுகாத்துக்கொள்வோம்.