வாதுவ தல்பிட்டிய பிரதேசத்தில் 19 மாத குழந்தையொன்று மீன்தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்
வீட்டில் இருந்த மீன் தொட்டியிலே குறித்த குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாய், தந்தை இருவரும் வீட்டில் இருந்தபோது, வீட்டின் முன்புறம் உள்ள மீன் தொட்டி அருகே குழந்தை நின்றிருந்த நிலையில், அவரைக் காணாததால், தேடியபோது தொட்டியில் கிடப்பதை தாய் பார்த்துள்ளார்.